கனடாவில் சாதனை படைத்த இலங்கை தமிழ்ப்பெண்! அவரை வாழ்த்திய தமிழர் வெளியிட்ட புகைப்படம்
கனடாவில் 87வது வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற இலங்கை தமிழ்ப்பெண்.
சமீபத்தில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம்.
கனடாவில் 87வது வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற இலங்கை தமிழ்ப்பெண்ணான வரதா சண்முகநாதனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த, ஏழு பேரப் பிள்ளைகளின் பாட்டியான வரதா சண்முகநாதன் (87) என்பவர், கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் வரதாவுக்கு கனடாவில் ஒரு பாராட்டு விழா நடந்த நிலையில் அதில் கனடா, ஒன்ராறியோவின் சட்டசபையின் ஸ்காபரோ - றூஜ் பார்க் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கலந்து கொண்டார்.
I had the honour of congratulating Mrs. Varatha Shanmuganathan for her amazing achievement of at 87 years old, being the oldest person to earn a master's degree at York University, as well as one of the oldest women to obtain a graduate degree from a Canadian university. pic.twitter.com/7ne4zryjdf
— Vijay Thanigasalam (@V_Thanigasalam) November 2, 2022
இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு அவர் எழுதியுள்ள பதிவில், யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மூத்த பெண்மணி என்ற பெருமையையும், கனடியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மூத்த பெண்மணிகளில் ஒருவராகவும் 87 வயதில் சாதனை படைத்த திருமதி வரதா சண்முகநாதனை வாழ்த்திப் பாராட்டும் பெருமை எனக்குக் கிடைத்தது என பதிவிட்டுள்ளார்.