தளபதி 69 படத்தை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் நடிக்கும் விஜய்- ஏன் தெரியுமா?

Yashini
in பொழுதுபோக்குReport this article
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான GOAT திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது.
இதையடுத்து நடிகர் விஜய் தற்போது எச். வினோத் இயக்கும் "தளபதி 69" படத்தில் நடித்து வருகிறார்.
அதன்பிறகு, விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில் சினிமாவில் விஜய் நடிக்கப்போகும் கடைசி படம் "தளபதி 69" தான் என்ற தகவல்கள் வெளியானது.
ஆனால் தற்போது விஜய் நடிக்கவுள்ள மற்றொரு படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதேபோன்று, மெர்சல், தெறி, பிகில்படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் அட்லீ.
அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஜவான்" ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி ரூ.1000 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
இதற்கடுத்து, சல்மான் கான் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் புதிய படம் ஒன்றை அட்லீ இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அட்லீ இயக்கவுள்ள இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள விஜய், அதே படத்தில் பாடல் ஒன்றுக்கும் நடனமாட உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |