விஜய் டிவியை வாங்கும் பிரபல நிறுவனம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி முன்னணி சேனலாக உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, நீயா நானா, பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
கைமாறும் விஜய் டிவி
இது போன்ற நிகழ்ச்சிகளால் சிவகார்த்திகேயன், குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, விஜே மணிமேகலை, கோபிநாத் என பிரபலமானவர்கள் பட்டியல் ஏராளம்.
தற்போது ஹாட்ஸ்டார், ஜியோ சினிமாவுடன் இணைந்து, ஜியோ ஹாட்ஸ்டாராக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே கலர்ஸ் தொலைக்காட்சி, ஜியோவுடன் இணைந்துள்ளது.
இந்நிலையில், விஜய் டிவியை, கலர்ஸ் பெரும் தொகைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில், விஜய்டிவியின் லோகோவும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பழைய நிகழ்ச்சிகள் பலவற்றை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |