தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது: நடந்தது என்ன?
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்லைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் எழுதியிருந்தார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்த கடிதத்தை நகல் எடுத்து தவெக கட்சியினர் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடித நகல்களை வினியோகம் செய்தனா்.
அப்போது அனுமதியின்றி இதுபோல் செயல்பட்டதாக கூறி தவெகவினரை பொலிஸார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா்.
அப்போது அவர்களை காணச்சென்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் பொலிஸார் கைது செய்தனர்.
இதன்படி அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதாக புஸ்ஸி ஆனந்தை கைது செய்து தனியார் மண்டபத்தில் தி.நகர் பொலிஸார் தங்க வைத்துள்ளனர்.
அவரது கைதுக்கு தவெக தொண்டர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனா்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |