ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க உள்ள தவெக அரசு - பட்ஜெட்டில் தகவல்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்கும் தவெக அரசு
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

இதில், பள்ளிக்கல்வி துறை, போக்குவரத்து துறை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது எனவும், தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்கடன்களை பொறுத்தவரையில் 2026 - 2027 ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ.1,73,445 கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடிதிருப்பி செலுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி 2027 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படி, தமிழக அரசின் கடன் 10 லடசத்து 98 ஆயிரத்து 768 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |