விஜய் கட்சியை பற்றி சமையல்காரர் சொன்ன சீக்ரட்.., பின்னணியில் இருக்கும் மதுரை
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு மதுரையில் நடக்கவிருப்பதாக விருது விழா வழங்கும் நிகழ்ச்சிக்கு சமைக்க வந்த சமையல்காரர் பகிர்ந்துள்ளார்.
கல்வி விருது விழா
தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கி வருகிறார்.
இதில் முதற்கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
சமையல்காரர் பேசியது
மாணவர்களுக்கு விருது வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி ஜூலை 3 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கும் சமையல் ஒர்டரை இன்று சமையல் செய்த கேட்டரிங்காரர்களுக்கே கொடுத்துள்ளனர்.
சமையல் கலைஞர்கள் அளித்த பேட்டியில், "விஜய் வீட்டிற்கு எந்த விழாவாக இருந்தாலும் எங்களுக்கே ஓர்டர் கொடுப்பார்கள். மதுரை மாநாட்டில் பங்கேற்கும் 10 லட்சம் பேருக்கு சமையல் செய்ய எங்களிடமே ஓர்டர் கொடுத்துள்ளார்கள்" என்று கூறினர்.
இதனால், விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் இருந்து தொடங்க போகிறார் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மதுரையையே தேர்வு செய்கின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், தேமுதிக விஜயகாந்த் தங்களது கட்சியை மதுரையில் இருந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |