விஜய்யின் தவெக சின்னம் இதுவா? 2 பிரபல கட்சிகள் தோல்வியடைந்த சின்னம்
விஜய்யின் தவெகவிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் தவெக சின்னம்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என களத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது.
முதல் தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து, இளம்தலைமுறை வாக்காளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு வழங்குவதற்காக தேர்தல் ஆணையம் 184 சின்னங்களை பட்டியலிட்டுள்ளது.
தவெக சார்பில், கடந்த மாதம் தேர்தல் ஆணையத்திடம் 5 சின்னங்களை வழங்கி, இதில் ஒன்றை ஒதுக்குமாறு விண்ணப்பித்திருந்தனர்.
ஆட்டோ சின்னம் கேட்டிருந்த நிலையில், அது கேரளாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இந்த சின்னத்தை தவெக தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் மோதிரம் சின்னம்
விஜயகாந்தின் தேமுதிக, தனது முதல் தேர்தலாக 2006 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இதில் அக்கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மட்டும் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது.

2014 நாடாளுமன்ற தேர்தலிலும், 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதியிலும், 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் 25 தொகுதிகளிலும் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்ட விசிக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
2019 நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் வழங்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |