50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில்..அண்ணன் செங்கோட்டையனை வரவேற்கிறேன் - விஜய்யின் வீடியோ
தங்கள் கட்சியில் இணைந்த செங்கோட்டையனை வீடியோய் வெளியிட்டு த.வெ.க தலைவர் விஜய் வரவேற்றுள்ளார்.
வரவேற்ற விஜய்
பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியில் இணைந்தார்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025
அவரை த.வெ.க தலைவர் விஜய் சால்வை அணிவித்து மரியாதை செய்து தமது கட்சிக்கு வரவேற்றார். மேலும், செங்கோட்டையனை வரவேற்பதாக கூறி விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "20 வயது இளைஞராக இருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி, அவர்களின் மன்றத்தில் சேர்ந்தவர்; அந்த சின்ன வயசிலேயே எம்.எல்.ஏ என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர்.
அதன் பின் அவருடைய அந்த பயணத்தில் அந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.
இப்படி 50 வருஷமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், இன்று அவருடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்களையும், அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவருக்கும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |