தவெக-வில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் வாழ்த்து
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் 2ஆம் திகதி தவெக தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவுபெறுகிறது. இவ்விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர் என தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக 120 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டார்.
தவெகவில் புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதத்துடன் தனது உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை விஜய் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள்…
— TVK Vijay (@tvkvijayhq) January 24, 2025
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |