அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது: விஜயகாந்த் உருக்கம்
நடிகர் சலீம் கவுஸின் மரணம் அதிர்ச்சியளித்திருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழில் சின்ன கவுண்டர், வெற்றி விழா, திருடா திருடா, ரெட், வேட்டைக்காரன் படங்ககளில் வில்லன் வேடத்தில் நடித்து மிரட்டியவர் சலீம் கவுஸ். 70 வயதான இவர் இதயக் கோளாறு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், நடிகர் சலிம் கவுஸ் அவர்கள் இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான திரு. சலிம் கவுஸ் அவர்கள் , சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் 'சக்கரை கவுண்டர்' கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் சலிம் கவுஸ் அவர்கள் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
— Vijayakant (@iVijayakant) April 28, 2022
மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான நடிகர் திரு. சலிம் கவுஸ், சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது pic.twitter.com/gfd2lZBpcY
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நடிகர் சலிம் கவுஸ் அவர்கள் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான நடிகர் திரு. சலிம் கவுஸ், சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது' என பதிவிட்டுள்ளார்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        