கேப்டன் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேற்று காலமானதை அடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் இன்று அடக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து
விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் தீவு திடலில் குவிந்து வருகின்றனர்.
தீவுத்திடலுக்கு இன்று காலை 6 மணிக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அரசு மரியாதையுடன்
அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி எடுத்து வரப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.