புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடந்து வந்த பாதை - நெஞ்சை உருக்கும் சோகம்
நாம் வாழும் இந்த உலகின் மனித வாழ்வு என்பது எப்போதும் மரணம் ஒன்றை மாத்திரமே நிரந்தரமாய்க்கொண்டது ஆனாலும் அந்த மரணம் ஏற்படுத்தும் இழப்பு என்பது அவர்களைச்சார்ந்தவர்களுக்கு ஒரு பேரிழப்பு எனலாம்
அப்படியாக ஒரு பேரிழப்பாக நிகழ்ந்திருக்கிறது புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களின் மறைவு.
மனித வாழ்வில் நாம் பலரை கடந்து வருகிறோம் அவர்களில் ஒருசிலரை மாத்திரமே நம் நினைவுகளில் சுமக்கிறோம் அப்படிப்பட்ட ஒரு காலக்காவியமாக நம்மிடையே வாழ்ந்து நம்மில் அனேகமானவர்களால் நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதராக விஜயகாந்தை குறிப்பிட்டுச்சொல்ல முடியும்.
இன்று 28.12.2023 இல் தனது 71 வது வயதில் கொரோனா தொற்றுக்காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.
தனது வாழ்நாளில் தன்னைப்போலவே பிறரையும் அதிகம் நேசித்த ஒருமனிதராக ஓய்வில்லாத ஒரு உழைப்பாளியாக மனிநேயம் மிக்க ஒருவராக எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்தமிழர்களை அதிகம் நேசித்த அதேநேரம் ஈழ்ழ்தமிழர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவரான விஜகாந்த் கடந்த 1952 ம் ஆண்டு எட்டாவது மாதம் 25 ம்திகதி அழகர்சாமி ஆண்டாள் தம்பதிகளுக்கு மகனாக மதுரையில் பிறந்தார் .
இவர் கடந்து வந்த பாதை தொடர்பில் விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |