விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது! இந்த காரணத்தினால் தான்
மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் நினைவிடம்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விஜயகாந்தை யார் பார்க்க வந்தாலும் முதலில் சாப்பிட்டு விட்டீர்களா என்று தான் கேட்பார். அவரின் கொள்கை படியே அன்னதானம் வழங்கப்படுவதாக தே.மு.தி.க.வினர் கூறினர்.
உலக சாதனை விருது
இந்நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Lincoln Book of Records) சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக இது போற்றப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |