தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்
கொரோனா தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சில தினங்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தார்.
தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தே.மு.தி.க. தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இன்று வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி விஜயகாந்தின் உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |