கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை - அறிக்கை வெளியிட்ட வைத்தியசாலை
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணித்தியாலங்களில் மோசமடைந்துள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்திருந்தார்.
இதையடுத்து இவர் கடந்த 18 ஆம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சளி மற்றும் தொண்டை வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணித்தியாலங்களில் மோசமடைந்துள்ளதாகவும், இதனால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என மருத்துவமனைவியின் நிர்வாக அதிகாரி, வைத்தியர். பிரித்வி மோகன்தாஸ் நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |