விஜயகாந்த் சாரை நினைக்காத நாள் இல்லை.., அவரின் பழைய சிரிப்பை பார்க்கணும்: நடிகர் பார்த்திபன் வேண்டுதல்
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயாகாந்த் நல்ல ஆரோக்யத்துடன் வீடு திரும்ப வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் உடல்நிலை
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் கடந்த 18 -ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மியாட் மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது" என்று கூறப்பட்டிருந்தது.
பார்த்திபன் வேண்டுதல்
இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில், " நான் நடித்த ’நினைக்காத நாளில்லை’ படம், அது பெயர் மட்டுமல்ல, விஜயகாந்த் சாரை நான் நினைக்காத நாளும் இல்லை. தினமும் என்னுடைய பிரார்த்தனையில் அவர் இருக்கிறார்.
அவரைக் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்ள அவரது மனைவி இருக்கிறார். அவரைத் தவிர வேறு பெரிய மருத்துவமனைகள் தேவையில்லை. அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதை விட அவர் எப்போதுமே நலமுடன் இருக்க வேண்டும். குணமாகவும் வேண்டும். அவருடைய பழைய சிரிப்பைப் பார்க்க வேண்டும் என்பதே வேண்டுதல்" என்று கூறியுள்ளார்.
ஏகமனதாக எல்லோராலும் நல்ல மனதுக்காரர் என போற்றபடுபவர் திரு விஜயகாந்த்.நேற்று அவரது துணைவியாருக்கு குருஞ்செய்தி அனுப்பினேன்.மருத்துவமனையிலிருந்து இன்று ஒரு அறிக்கை>அதிர்ச்சியாக இருந்தது.எனக்குத் தெரிந்து குறை சொல்ல ஏதுமற்ற உள்ளமது. குறைவின்றி நல்ல ஆரோக்யத்துடன் வீடு திரும்ப வேண்டும pic.twitter.com/GCmXYbGpwN
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 29, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |