ஈழத்தமிழர் விஜயகாந்த் வியாஸ்காந்த்துக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஐ.பி.எல் ஏலத்தில் வாய்ப்பு: ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் ஏலத்திற்கான இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், இதில் இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த முறை கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக ஏலத்தில் பங்கேற்க, கடந்த வாரம் 1097 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் ஏலத்துக்கான இறுதிப்பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது அதில் பதிவுசெய்த 1097 பேரில் 292 பேரை பிசிசிஐ இறுதி செய்துள்ளது.
குறிப்பாக சூதாட்ட பிரச்சனை காரணமாக, தடைவிதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுவந்த ஶ்ரீசாந்த், சமீபத்தில் நடந்த சையது முஸ்தாக் டிராபியில் விளையாடி இருந்தார்.
இதையடுத்து, ஐபிஎல் ஏலத்திலும் தனது பெயரை ஸ்ரீசாந்த் பதிவு செய்திருந்தார். ஆனால் அவரின் பெயர் பிசிசிஐ அறிவித்துள்ள இறுதிப்பட்டியலில் இல்லை.
அதேப்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக வீரர் முரளி விஜய்யின் பெயரும் இறுதிப்பட்டியலில் இல்லை.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி, சமீபத்தில், இலங்கையில் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீகில் ஜாப்னா அணிக்காக விளையாடிய இலங்கை தமிழரான, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த்தின் பெயர் ஐபிஎல் ஏலத்துக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவரின் ஆரம்ப விலை 20 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

