தூக்கத்திலேயே பிரிந்த உயிர்... பிரபல நடிகையின் மரணம் குறித்து மகளின் உருக்கமான பேட்டி
பிரபல நடிகை விஜயலட்சுமி (70) உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது.
பிரபல நடிகை விஜயலட்சுமி உயிரிழந்தார்
தமிழில் ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை விஜயலட்சுமி. இதனையடுத்து, ரஜினி கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக மக்கள் மத்தியில் வலம் வந்தார். மேலும், சின்னத்திரையில் இவர் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவிற்கு பாட்டியாக நடித்து விஜயலட்சுமி பாராட்டு பெற்றார்.
சமீபகாலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு உடல்நிலை மோசமாகி மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். சமீப காலங்களாக விஜயலட்சுமி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். சில தினங்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் ஆகியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை தூக்கத்திலேயே இவர் உயிரிழந்தார்.
இவருடைய மரணம் ரசிகர்களிடையே பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நடிகை விஜயலட்சுமிக்கு திரையுலகத்தினரும், ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அம்மாவின் மணரம் குறித்து நடிகை விஜயலட்சுமியின் மகள் காவியா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
என் அம்மாவிற்கு சர்க்கரைநோய் இருந்தது. 40 வருடங்களாக அவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. கிட்னியிலும் என் அம்மாவிற்கு பிரச்சினை இருந்தது.
இந்த ஒரு வார காலமாக அவர்களுக்கு ரொம்ப உடம்பு முடியவில்லை. சிறுநீரகத்தில் பிரச்சினை முற்றிப்போய் சீழ் வந்துவிட்டது . இதனையடுத்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்தோம். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வரம்போதுகூட நான் நல்லா இருக்கேன் என்று அவங்க சொன்னாங்க. வீட்டிற்கு வந்து சரியா சாப்பிடவில்லை. ஜூஸ் மட்டும் குடித்துசிட்டு வந்தாங்க.
நேற்று காலையில் அவர்களுக்கு மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்தாங்க. எனக்கு பதட்டமாகிவிட்டது. உடனே செக்யூரிட்டியை கூப்பிட்டேன். ஆம்புலன்ஸை வரவழைத்தேன். மருத்துவர்கள் வந்து உறுதி செய்தாங்க. அவங்க இறந்து விட்டாங்க என்று. கொஞ்ச நாட்களாக அவங்க சுயநினைவு இல்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டாங்க.
எங்க அம்மா கொஞ்சம் கடன் பிரச்சினையில் இருந்தாங்க. 8 மாதங்களாக அடிக்கடி மருத்துவமனைக்கு போனாங்க. அதனால நிறைய செலவு ஆகிடுச்சு. ஒரு பெரிய ஆபரேனும் நடந்தது. அதற்கும் நிறைய செலவு ஆனது. எங்க அம்மா நிறைய பேருக்கு உதவி செய்திருக்காங்க.
நிறைய கடனாக பணம் கொடுத்திருக்காங்க. நானும், அம்மாவும் தனியாக இருந்தோம். சொந்தக்காரர்கள் யாரும் எங்களுக்கு இல்லை. சின்னத்திரை நடிகர் சங்கத்திலிருந்து நிறைய பேர் வந்தாங்க. அம்மாகூட நடித்தவர்கள் சினிமா பிரபலங்கள் வந்து என் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்கள். அம்மாவை அடக்கம் செய்யும் வரை அவங்கதான் கூடவே இருந்தாங்க. நிறைய உதவி செய்தாங்க என்று தழுதழுத்த குரலில் பேசினார்.