சீமானின் வீடியோவை வெளியிடப்போவதாக பரபரப்பை கிளப்பும் விஜயலட்சுமி
நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்டம் போட்ட அனைத்து வீடியோக்களையும் வெளியிடப்போவதாக நடிகை விஜயலட்சுமி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சீமான் தன்னை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக புகார் கொடுத்த விஜயலட்சுமி, புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு பெங்களூருக்கே திரும்பிச் சென்றார்.
பின்னர், சீமானுக்கும் தனக்கும் பிரச்சினை முடிந்துவிட்டதாகவும், இனி சீமான் விஷயத்தில் குறுக்கிட மாட்டேன் எனவும் விஜயலட்சுமி கூறினார்.
விஜயலட்சுமி பேசியது
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் பேசுகையில், "சீமான் ஏதோ உத்தமன் மாதிரி பேசுகிறார். எனக்கு மனைவி இருக்கிறார்,பசங்க இருக்கிறார்கள் என்று பேசுகிறார்.
அப்புறம் எதற்காக என்கிட்ட வந்த? திமுக முன்னாடி மானம் போகுதுன்னு எனக்கு மாசம் மாசம் எதுக்கு 50 ஆயிரம் ரூபாய் போட்ட? உனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கிறதா?
என்னையும், கர்நாடாக நடிகரையும் வைத்து பேசுறியே? கர்நாடகாவில் பிரஸ் மீட் வெச்சு, கன்னட அமைப்புகளிடம் சொல்லி உன்னை என்ன பண்ண போறேன்னு பாரு.
ஈழத்துக்காக பிரபாகரன் சண்டை போட்ட நேரத்தில் என்கூட ஆட்டம் போட்டுட்டு இருந்த, அப்புறம் எப்படி ஈழத்தை வாங்கிக் கொடுப்பன்னு நம்புவார்கள்.
கடந்த வருடம் ஆட்டம் போட்ட வீடியோவை எடுத்து வைத்திருக்கிறேன். அதை போட்டு விடுகிறேன்" என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |