என் உயிரை முடிச்சிக்கப்போறேன்! தலைவர் பேரை சொல்லி சீமான் நாசம் செய்தார் - கடைசி வீடியோ என வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி
நாம் தமிழர் சீமானை குறிப்பிட்டு, நடிகை விஜயலட்சுமி தனது மாய்த்துக் கொள்ளப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் பின்னர் கர்நாடகா செல்வதாக கூறி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி இதுதான் எனது கடைசி வீடியோ என்று கூறியுள்ளார்.
கடைசி வீடியோ
அவர் அந்த வீடியோவில், 'பிப்ரவரி 29ஆம் திகதி வெளியிட்ட வீடியோவில் சீமானை பேச சொல்லி கோரி இருந்தேன். இன்று மார்ச் 5ஆம் திகதி. 2008ஆம் ஆண்டு என் அக்காவின் பிரச்சனைக்காகத்தான் நான் சீமானை சந்தித்தேன், என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி என்னுடன் 3 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, என் வாழ்க்கையை சீரழிச்சி, ரகசியமாக என்னுடன் திருமணமும் செய்தார். அதை வெளியில் கூறாமல், தலைவர் பிரபாகரன் பேரைச் சொல்லி என்னை ஏமாற்றி எல்லாத்தையும் நாசம் செய்தார்.
இவருக்கு ஏதோ பிரச்சனை என கூறிவிட்டு அப்படியே என்னை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். என்னை வாழவிடுவாரா என்று பார்த்தால், தமிழ்நாட்டில் எனக்கு விபச்சாரி என்ற பட்டம் கட்டி என்னை அசிங்கப்படுத்தி, எனக்கு யார் உதவி செய்ய வந்தாலும் என்னைப் பற்றி கொச்சை கொச்சையாக பேசினார்.
இது தான் என்னோட கடைசி வீடியோ.. நடிகை Vijayalakshmi வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
— IBC Tamil (@ibctamilmedia) March 5, 2024
#Vijayalakshmi | #Actressvijayalakshmi | #Seeman | #ibctamil pic.twitter.com/J3gRjNI03k
போன வருஷம் மார்ச்சில் திமுகவினர் முன்னாடி என் மானம் போகுது, என்னைப் பற்றி பேசவேண்டாம், நான் அவளை காப்பாற்றுகிறேன், நான் தான் அவளின் புருஷன் என்று மதுரை செல்வத்தை வைத்து டீலிங் பேசினார். இன்று கயல்விழிதான் தன் உயிர் என்று பெரிய டிராமா போடுகிறார். சீமான் செய்த அட்டூழியம் ஒன்று, இரண்டு கிடையாது.
கர்நாடகாவில் என்னால் வாழ முடியவில்லை என்று கூறினால் கூட, பரவாயில்ல நீ கர்நாடகாவில் சாவு என விடுகிறார் என்றால், அதுதான் நடக்கப்போகிறது. இதுதான் கடைசி வீடியோ தமிழ்நாட்டுக்கு, இன்னும் 2 நாள் கழித்து நான் எப்படி செத்தேன் என்பதை கர்நாடகா தெரியப்படுத்துவார்கள்.
ஜெக்கேஷ் என்ற நடிகரோடு என்னை சேர்த்து வைத்து பேசி கொச்சைப்படுத்திவிட்டனர். கர்நாடகாவில் இருந்து சீமானுக்கு அழைப்பு வரும், என் மரணத்திற்கும் பதில் சொல்ல சொல்லி அவருக்கு அழைப்பு வரும்.
இதுதான் என் கடைசி வீடியோ என தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய மரணம் சீமான், நாம் தமிழர் கட்சி என்ன என்பதை நன்றாக புரிய வைத்துவிடும். இந்த மாதிரியான நபர் தமிழ்நாட்டுக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |