வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட விஜயகாந்த் எப்படியிருக்கிறார்? மகன் விஜய பிரபாகரன் கூறிய தகவல்
விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தைராய்டு பிரச்சனை , தொண்டையில் தொற்று, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் அவரது ஆரோக்கியம் குன்றியது.
தனது உடல் நலக் கோளாறுகளுக்காகச் சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார் விஜயகாந்த். சென்னையிலும், அமெரிக்காவிலும், சிகிச்சைகளைத் தொடர்ந்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக சமீபத்தில் துபாய் சென்றார். இதற்காக சக்கர நாற்காலியில் விஜயகாந்த் விமான நிலையத்தில் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்கள் அதிர்ச்சியடைய வைத்தது. இந்தளவுக்கு உடல்நிலை அவருக்கு குன்றி போய்விட்டதே என கவலைப்பட்டனர்.
DMDK president @iVijayakant left for Dubai from Chennai for medical treatment on Monday morning. He was accompanied by his youngest son Shanmuga Pandian and his assistants Kumar and Somu. #DMDK #Vijayakanth @aaichnairport #Chennai #Dubai#Chennaiairport pic.twitter.com/KRPOKhPewC
— DT Next (@dt_next) August 30, 2021
இந்த நிலையில் விஜயகாந்த் குறித்து அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், விஜயகாந்த் உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
அரசியலில் வெற்றி தோல்வி சகஜம், முன்பை விட தேமுதிக தோல்வியிடத்தில் உள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக நிச்சயமாக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் ஊர் திரும்பியவுடன் அறிவிப்பார் என கூறியுள்ளார்.