உடல்நலம் குன்றியதால் மிகவும் தடுமாறிய விஜயகாந்த்! கண்ணீர் விட்டு அழுத தொண்டர்கள் வீடியோ
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசிய கொடியை உடல்நலக்குறைவு காரணமாக தட்டுதடுமாறி ஏற்றியதை பார்த்த தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார். மிகவும் உடல்நலம் குன்றி போய் உள்ள விஜயகாந்த் கொடி ஏற்றமுடியாமல், தடுமாறினார்.
மேலும், தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதற்கே பிறரது உதவி தேவைப்படும் அளவிற்கு உடல்நிலை மோசமாக இருந்ததைக் கண்ட தேமுதிக் தொண்டர்களும், ரசிகர்களும் கண் கலங்கியபடி அங்கிருந்து விலகிச் சென்றனர்.
அதாவது தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் போலவே அவர் மிகவும் பலவீனமாக இருந்தார்.
பழைய பன்னீர் செல்வம்? ????
— ✨ டிக்.டிக்.யாரது??? (@Ilavarasu14) August 15, 2022
pic.twitter.com/9skgszZQtX