ஒரு இனத்தை அழித்த ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார்! விஜயகாந் காட்டம்
இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட வன்முறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தென்னிந்திய நடிகர் பலரும் தங்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். 
இந்நிலையில் நடிகரும் தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந் தனது டிவிட்டர் பக்கத்தில் ராஜபக்ஷே குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
“கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜினாமா செய்துள்ளார்.
ஒரு இனத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து, அத்தனை மக்களையும் கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து மிக கொடூரமான நடந்து கொண்ட ராஜபக்சேவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை.
இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரின் வயிறு எப்படி எரிந்ததோ, அந்த சாபம் தான் இன்றைக்கு இலங்கையே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு செய்த கொடுமைகளுக்காகவும், அப்பாவி தமிழர்ளை கொன்றதற்காகவும் ராஜபக்சே குடும்பதிற்கு கிடைத்த தண்டனையாக தான் இதை பார்க்கப்படுகிறது.
இன்றைக்கு தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அவருடன் இறந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மை சாந்தி அமைந்திருக்கும். எனவே அந்த மக்களை இன்று நாம் நினைத்து அவர்களுக்காக பிரத்தனை செய்வோம் ” என்று பதிவிட்டுள்ளார்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        