நீங்கள் தான் என் இன்ஸ்பிரேஷன்! பெருமைப்படுறேன் சார்.. இலங்கை தமிழரான பிரபல கிரிக்கெட் வீரர் உணர்ச்சிபூர்வமான பதிவு
குமார் சங்ககாராவின் பிறந்தநாளுக்கு யாழ்ப்பாண தமிழரான கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியஸ்காந்த் வாழ்த்து தெரிவித்து உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் வியஸ்காந்த் (19). இவர் கடந்தாண்டு நடைபெற்ற லங்கா ப்ரீமியர் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
மேலும் ஐபிஎல் தொடரின் ஏல பட்டியலிலும் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயர் இடம்பிடித்திருந்தது.
Many more happy returns of the day world legend @KumarSanga2 sir??
— Vijayakanth Viyaskanth (@RealVijayakanth) October 27, 2021
you are my 1st inspiration and God bless you✨
I'm so proud to remember that I meet you sir ? pic.twitter.com/dcJdhpqqz6
வருங்காலத்தில் இந்த துடிப்பான இளைஞர் இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடிய இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாராவுக்கு விஜயகாந்த் வியஸ்காந்த் வாழ்த்து தெரிவித்தார்.
அதில் சங்ககாராவிடம் இருந்து பள்ளி உடையில் பரிசு வாங்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.
விஜயகாந்த் வியஸ்காந்த் பதிவில், உலக ஜாம்பவான் குமார் சங்ககாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் தான் எனது முதல் இன்ஸ்பிரேஷன். உங்களைச் சந்தித்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன் சார் என உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.