இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் டோனி பிறந்தநாளுக்கு வாழ்த்திய ஈழத்தமிழரான இலங்கை வீரர்! புகைப்படம்
டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஈழத்தமிழரான இலங்கை கிரிக்கெட் இளம் வீரர் வியாஸ்காந்த் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
நேற்று டோனி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் டோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Happy birthday @msdhoni pic.twitter.com/NdW4cxt1bP
— Vijayakanth Viyaskanth (@RealVijayakanth) July 7, 2021
அந்த வகையில் ஈழத்தமிழரான இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தும் டோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன் கோப்பை என மூன்று கோப்பையுடன் இருக்கும் டோனியின் புகைப்படத்தை வியாஸ்காந்த் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.