சிவசங்கர் பாபா அப்படியானவர் என்றால் சீமான் யார்? அவரை கைது செய்யனும்... நடிகை விஜயலட்சுமி ஆவேச வீடியோ
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மீண்டும் விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், சீமானும் அவரது ஆதரவாளர்களும் என் மீது நடத்திய தாக்குதல்கள் பற்றி அதிமுக ஆட்சியில் புகார் கொடுத்தபோது சீமானுக்கு ஆதரவாக செயல்பட்டு, என்னையும் என் வாழ்க்கையையும் டோட்டலாக டேமேஜ் செய்துவிட்டார்கள்.
திமுகதான் விஜயலட்சுமியை இயக்குகிறது என்று ஆதாரமே இல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொம்பளை வச்சு அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கார் ஸ்டாலின் என்று சொன்னார்கள்.
அதற்கு நானே பயங்கரமாக திட்டி வீடியோ போட்டேன். முதலில் சீமான் என்னை யார் என்றே தெரியாது என்றார். நான் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார். சீமான் விவகாரத்தில் அமீர் உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அப்புறம்தான் நான் ஆதாரத்தை வெளியிட்டேன். சிவசங்கர் பாபா பொம்பள பொறுக்கின்னா சீமான் யார்?
என்னை திருமணம் செய்துகொள்ள முடியாதுன்னு சொன்னா என்னுடன் ஏன் அவர் தொடர்பு வச்சிக்கணும்?
ஒரு பொண்ணை சீரழித்தது? அதை இல்லை என்று மறைக்க முயற்சிப்பது? கட்சிக்காரர்களை வச்சு மிரட்டுவது என்று அவர் மீது ஏகப்பட்ட செக்சனில் வழக்கு போடமுடியும்?
என்னை சீரழிச்சதும் இல்லாம ஒரு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை சீமான்.
வருத்தம் தெரிவிப்பதை கேவலமாக நினைக்கிறார். அது கேவலம் இல்லை. நீ பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று கேட்கவேண்டிய காலம் இது.
சாந்தினி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்தது மாதிரி சீமானையும், அவரது ஆதரவாளர்களையும் திமுக அரசு கைது செய்ய வேண்டும்.
சிவசங்கர் பாபா பொம்பள பொறுக்கி, பத்மாசேஷாத்ரி ஸ்கூல் ஒய்.ஜி.மகேந்திர பொம்பள பொறுக்கின்னு சொல்லும் சீமான் யார்? திமுக பழிவாங்குது ? என்றெல்லாம் பேசும் சீமான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கணும்.
அதற்கு என் வழக்கை எடுத்து விசாரிக்கணும். ஊரைவிடே ஓட்டிவிடுவோம் என்று சொன்னார்கள். அதே மாதிரியே என்னை ஓட்டியாச்சு. நான் இப்போ பெங்களூரில் இருக்கேன். என்னை வேஸ்ட்டேஜ், விபச்சாரி என்று சீமான் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தி வருகின்றனர்.
சீமான் மீதான என் புகாருக்கு ஒரு எப்.ஐ.ஆர். கூட இன்னும் போடவில்லை. அதிமுக அரசு அவரை காப்பாற்றி விட்டது. திமுகவை நான் நம்புகிறேன் என பேசியுள்ளார்.