முதல் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளின் சம்மதத்துக்காக காத்திருந்து மறுமணம் செய்துகொண்ட கோடீஸ்வர தம்பதி!
பிரபல நடிகரும், இயக்குனரும் கோடீஸ்வரருமான விக்ரம் பட் தன்னை விட வயதில் மிகவும் குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பாலிவுட் பிரபலமான விக்ரம் பட் அதிதி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதன்பின்னர் நடிகை அமீஷா பட்டேல், சுஷ்மிதா சென் ஆகியோருடன் டேட்டிங் செய்தார்.
இந்த நிலையில் 30களில் உள்ள ஸ்வேதாம்பரி சோனி என்ற பெண்ணை விக்ரம் பட் ரகசிய திருமணம் செய்து கொண்டிருக்கிறார், சோனிக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2020 லாக்டவுன் நேரத்தில் ரகசியமாக இருவரும் மணந்து கொண்ட நிலையில் அந்த விடயம் தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது. இதை விக்ரம் பட்டேன் உறுதி செய்துள்ளார், மேலும் இந்த திருமணத்தில் தனது மூன்று சகோதரிகள் உள்ள குடும்பத்தார் சிலர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
திருமணம் நடந்த பின்னர் ஏன் அதை மறைத்து வைத்தோம் என தம்பதிகள் கூறியிருக்கின்றனர். அதன்படி 2016ல் இருந்து இருவரும் காதலித்து வந்தனர், இருந்த போதிலும் தங்களின் குழந்தைகளின் ஒப்புதலை பெற விரும்பியே இவ்வளவு நாள் அது குறித்து வெளியில் சொல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        