நிலவில் சந்திரயான் -3 எங்கு உள்ளது? விக்ரம் லேண்டர் புகைப்படம் வெளியிட்ட நாசா
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் செயற்கைகோள் எடுத்த சந்திரயான் -3 லேண்டர் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
சந்திரயான் -3 விண்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.
அதன்படி, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு மாலை சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது.
சமீபத்தில், சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட 3D புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த முப்பரிமாண புகைப்படத்தை நீல நிற கண்ணாடிகள் மூலம் பார்க்கலாம் என இஸ்ரோ கூறியது.
லேண்டர் புகைப்படத்தை வெளியிட்ட நாசா
இந்நிலையில், நிலவின் தென்பகுதியில் இருக்கும் சந்திராயன் -3 விண்கலத்தின் லேண்டர் புகைப்படத்தை நாசா செயற்கைக்கோள் எடுத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) லேண்டர் புகைப்படத்தை கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி எடுத்துள்ளது. இந்த புகைப்படம், செயற்கைக்கோளின் எல்ஆர்ஓ -ஆல் எடுக்கப்பட்டது.
இதற்கான புகைப்படத்தை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சுற்றியுள்ள ஒளி வட்டத்திற்கு அருகே இருண்ட நிழல் தெரிகிறது.
மேலும், நிலவின் தென் துருவத்தில் இருந்து 600கி.மீ தொலைவில் சந்திரயான்-3 விண்கலம் இருக்கிறது என்றும் நாசா கூறியுள்ளது.
.@NASA's LRO spacecraft recently imaged the Chandrayaan-3 lander on the Moon’s surface.
— NASA Marshall (@NASA_Marshall) September 5, 2023
The ISRO (Indian Space Research Organization) Chandrayaan-3 touched down on Aug. 23, 2023, about 600 kilometers from the Moon’s South Pole.
MORE >> https://t.co/phmOblRlGO pic.twitter.com/CyhFrnvTjT
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |