Village Cooking தாத்தாவுக்கு ராகுல் காந்தி உதவி செய்ய மறுத்தாரா? Channel தரப்பில் சொல்லும் விளக்கம்
வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவின் மருத்துவ செலவிற்கு ராகுல் காந்தியிடம் உதவி கேட்டதாகவும், அதை அவர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் பொய்யாக பரவியது.
ராகுல் காந்தி
கிராமத்து சமையல் Youtube Channel வரிசையில் Village Cooking Channel பிரபலமாக உள்ளது. இந்த சேனல் சமையல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.
அப்போது அவர் ஓலைப்பாயில் அமர்ந்து காளான் பிரியாணி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது.
மேலும் அவர், உங்களது சேனலை யூடியூபில் பார்த்து நேரில் வந்திருக்கிறேன் என்று ஆங்கிலத்தில் சொல்லவே, அதனை ஜோதிமணி தமிழில் மொழிபெயர்த்தார். பிரியாணியை சாப்பிட்டு முடித்து விட்டு நல்லா இருக்கிறது என்றும் கூறினார்.
பொய்யான செய்தி
அண்மையில், சேனலில் இருக்கும் தாத்தாவிற்கு இதய பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார் என்றும், உங்களது ஆதரவுக்கு நன்றி எனவும் Village Cooking சேனல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தாத்தாவின் மருத்துவ செலவுக்கு ராகுல் காந்தியிடம் உதவி கேட்டு, அதை அவர் மறுத்ததாகவும் பொய்யான செய்திகள் பரவியது. இதற்கு சேனல் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், "இது முற்றிலும் பொய். எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மன வருத்தத்தை தருகிறது. இப்படி பொய்யான தகவலை பரப்புபவர்களின் கட்சி தலைமை கட்டுப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |