கோடிகளில் வருமானம் ஈட்டும் Village Cooking Channel.., சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?
புதுக்கோட்டை மாவட்டம் சின்ன வீரமங்கலம் பகுதியில் பிறந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் வில்லேஜ் குக்கிங் சேனலின் சொந்தக்காரர்கள்.
வயதில் மூத்தவரும் சமையல் வல்லுனருமான பெரியதம்பியின் தலைமையில் இளைஞர்கள் சுப்பிரமணியம், அய்யனார், தமிழ்செல்வன், முத்துமாணிக்கம், முருகேசன் சமையலில் ஈடுபடுவார்கள்.
கிராமத்து பின்னணியில் மிகுந்த உற்சாகத்தோடு 6 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் வீடியோக்களை வில்லேஜ் குக்கிங் சேனல் பதிவிட்டு வருகிறது.
தென்னிந்திய சமையல் முதல் உலக பிரபலமான உணவுகளை சமைத்து ருசித்து அவற்றை ஆதரவற்றோருக்கும் பகிர்வது இவர்களின் வழக்கம்.
வில்லேஜ் குக்கிங் சேனல் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த சேனல் சுமார் 2.65 கோடி பின்தொடர்பவர்களை கொண்டுள்ளது. இதுவரை 231 வீடியோக்களை இந்த சேனலில் பதிவிட்டுள்ளனர்.
வில்லேஜ் குக்கிங் சேனலில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்கள் இதுவரை 767 கோடியே 2 ஆயிரத்து 347 பார்வைகளை பெற்றுள்ளது.
2018ல் தொடங்கப்பட்ட இந்த யூடியூப் சேனல் தமிழகத்தின் முதல் 1 கோடி பின்தொடர்பவர்களை பெற்ற சேனல் ஆகும். இதற்காக டைமண்ட் பட்டனும் யூடியூப் சார்பில் வழங்கப்பட்டது.
வில்லேஜ் குக்கிங் சேனலின் நிகர மதிப்பு சுமார் 2.88 மில்லியன் டாலர் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 24.5 கோடி ஆகும்.
அக்குழுவுக்கு யூடுயூப்பில் இருந்து மட்டும் மாதம் 10 லட்சம் ரூபாய் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதை தவிர முகநூல் உள்ளிட்ட சில வலைதளங்களில் 2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகின்றதாக சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |