உலகில் ஒரு துளி கூட மழையே பெய்யாத கிராமம்: எது தெரியுமா?
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கும் மழை என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
வானம் மழை பொழிந்தால் தான் பூமியின் அனைத்து இடங்களும் செல்வ செழிப்பாக இருக்கும்.
ஆனால் உலகில் மழையே பெய்யாத இடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகவும் ஆச்சரியமான ஒரு விடயம்தான்.
உலகில் மழையே பெய்யாத ஒரு கிராமம் உள்ளது. பல ஆண்டுகளாக மழையின்றி அந்த கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் தான் அல் ஹுதீப் என்ற இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமம் தரை மட்டத்திலிருந்து சுமார் 3200m உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது.
மற்ற இடங்களை விட்டு உயரமாக இருந்தாலும் இந்த இடம் வறட்சியுடன் தான் காணப்படுகிறது. சிறிதளவும் மழையின்றி அல் ஹுதீப் கிராமம் எப்போதும் வறண்டு கிடக்கிறது.
பகலில் அதிகப்படியான வெப்பமும் இரவில், கிராமத்தில் உறைபனி குளிரும் இறங்குகிறது. மீண்டும் காலை சூரியன் உதிக்கும்போது வானிலை வெப்பமடைகிறது.
ஏமனின் இந்த பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும் மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளது தான் மழை பெய்யாததிற்க்கான காரணம். அதன் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன.
அல் ஹுதீப் கிராமத்தின் இடம் சமவெளியில் இருந்து சுமார் 3200m உயரத்தில் உள்ளது. சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000m- க்குள் குவியும்.
எனவே அல் ஹுதீப்-ன் மீது மேகங்கள் குவியாததால் இங்கு சிறிதளவு கூட மழை பெய்ய வாய்ப்பில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |