காலி செய்யப்பட்ட பிரித்தானிய கிராமம்: அமெரிக்க விமான தளத்திற்கு அருகே பரபரப்பு
Village in Uk Evacuated near RAF FairFord: பிரித்தானியாவில் உள்ள ள RAF ஃபேர்போர்ட்(RAF Fairford) சுற்றியுள்ள கிராமம் பாதுகாப்பு காரணங்களுக்காக காலி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பரபரப்பு
பிரித்தானியாவில் உள்ள ள RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்திற்கு அருகே ஏற்பட்ட பாதுகாப்பு சம்பவத்தை அடுத்து, பல ஆண்கள் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள வெல்ஃபோர்ட்(Welford) கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவசரகால பாதுகாப்பு நெறிமுறைகள் அமுல்படுத்தப்பட்டதாக Gloucestershire காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தை சுற்றியுள்ள பல்வேறு வாகனங்களை சோதனை செய்வதற்காக பிரித்தானிய ராணுவத்தின் சிறப்பு வெடிபொருள் அகற்றும் குழு(EOD) களமிறங்கியுள்ளது.
ஸ்விண்டன் அருகே அமைந்துள்ள இந்த பகுதியில் RAF ஃபேர்போர்ட் விமான தளம், அமெரிக்கா வான்படையின் 501 வது மற்றும் 420 வது ஆதரவு படைத் தலைமையகம் மற்றும் வான் தளப் பிரிவு அமைந்துள்ள முக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.