நாவூறும் சுவையில் கிராமத்து கருவாட்டு குழம்பு: செய்வது எப்படி?
கருவாட்டு குழம்பு என்பது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒன்று.
கருவாடுகளில் ஆண்டிஆக்ஸிடன்ட் அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் கிராமத்து கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருவாடு- 15
- முருங்கைக் காய்- 2
- கத்தரிக்காய்- 4
- உருளைக்கிழங்கு- 1
- சின்ன வெங்காயம்- 20
- பூண்டு- 15
- பச்சை மிளகாய்- 1
- தக்காளி- 2
- காய்ந்த மிளகாய்- 1
- கொத்தமல்லி இலை- கையளவு
- குழம்பு மிளகாய் தூள்- 1½ ஸ்பூன்
- புளி தண்ணீர்- ¼ கப்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- உப்பு - தேவையானஅளவு
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- எண்ணெய்- தேவையானஅளவு
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் லேசான சுடுநீரில் கருவாட்டினை 2 அல்லது 3 முறை கழுவி எடுத்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் குழம்பு மிளகாய் தூள் மல்லி தூள் வதக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும். பின் குழம்பிற்க்கு தேவையான தண்ணீரை ஊற்றி காய்களை வேகவிடவும்.
பின் புளிக் கரைசல் சேர்க்கவும். கடைசியாக கருவாடுகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான கருவாட்டு குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |