அருகிலிருக்கும் மெஸ்ஸியை பார்க்காமல்.,கண்டங்கள் கடந்து வந்த பிரபலம்: கைகட்டி பேச்சை கேட்ட ரொனால்டோ
ஹாலிவுட் நடிகர் வின் டிசல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டிசல்
அல் இத்திஹாத் அணிக்கு எதிரான போட்டியில் மோதிய அல் நஸர் அணி தோல்வியுற்றது.
போட்டி முடிந்த பின்னர் ஓய்வறையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை (Cristiano Ronaldo) சந்திக்க, பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டிசல் (Vin Diesel) வந்திருந்தார்.
அவரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்த ரொனால்டோ, அமைதியாக கைகட்டியபடி பாராட்டுகளை வாங்கிக்கொண்டார்.
Vin Diesel to Cristiano Ronaldo:
— fan (@NoodleHairCR7) December 7, 2024
"You've been a Champion in this country" 🇸🇦 🐐 pic.twitter.com/g4PnLtNA2N https://t.co/prK1uMkbfS
சாம்பியன்
ரொனால்டோவின் ஆட்டத்தை பாராட்டிய வின் டிசல், "நீங்கள் இந்த நாட்டில் ஒரு சாம்பியன்" என குறிப்பிட்டார்.
இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்து வரும் ரொனால்டோ ரசிகர்கள், "வின் டிசல் அருகில் வசிக்கும் மெஸ்ஸியை பார்க்காமல், 8 கண்டனங்களில் பயணம் செய்து சவுதி அரேபியாவில் உள்ள ரொனால்டோவை சந்திக்க வந்துள்ளார்" என குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்காவின் Inter Miami அணியில் விளையாடி வரும் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) புளோரிடா மாகாணத்தில் வசித்து வருகிறார். அதே பகுதியில் வின் டிசலுக்கு வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |