கேழ்வரகு மாவு இருந்தால் போதும்...! விநாயகருக்கு பிடித்த லட்டு தயார்
பாரம்பரிய இந்திய இனிப்புகளை ருசிக்க விரும்பினால் நீங்கள் லட்டுவை ருசித்து பார்க்கலாம்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், பக்தர்களும் கணபதி பாப்பாவை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியின் சிறப்புப் பண்டிகையானது சாதாரண மக்களால் மட்டும் கொண்டாடப்படுவதில்லை, இதை பலரும் பக்தியுடன் கொண்டாடுவார்கள்.
அவ்வாறு வீட்டில் கொண்டாடப்படும் இப்பண்டிகையின் போது விநாயகருக்கு பிடித்த லட்டை எப்படி கேழ்வரகு மா வைத்து செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு - 1 கப்
- முந்திரி பருப்பு - சிறிதளவு
- தண்ணீர் - 1/2 கப்
- வெல்லம் - 150 கிராம்
- ஏலக்காய் தூள்
- நெய்
செய்முறை
1. ஒரு கடாயில் நெய் ஊற்றி கேழ்வரகு மாவு போட்டு குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும்.
2. அடுத்து ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து கரைக்கவும்.
4. வெல்லம் கரைந்த பின் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
5. வெல்லப்பாகு ஆறிய பின் அதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
6. வறுத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு மற்றும் நெய் ஊற்றி கலக்கவும்.
7. கரைத்த வெல்லப்பாகை சிறிது சிறிதாக ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும்.
8. பின் இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் சுவையான கேழ்வரகு லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |