விநாயகர் சதுர்த்தி: விதவிதமா நெய்வேத்தியம் செஞ்சு பாருங்க
Healthy Food Recipes
Honey
By Kirthiga
பொதுவாகவே பண்டினை என்றால் இனிமையான தருணங்களாக தான் இருக்கும். அந்தவகையில் பிள்ளையாரை வணங்கி கொண்டாடும் பிள்ளையார் சதுர்த்தி வருகின்றது.
அன்றைய தினத்தில் பிள்ளையாருக்கு பால் கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, எள்ளுருண்டை, பொரி உருண்டை அவல் பாயாசம் என பலவிதமான இனிப்பு பண்டங்களை செய்து வழிப்படுவார்கள்.
ஆகவே இந்த இனிப்பு பண்டங்களை எப்படி வீட்டில் இலகுவாக செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
-
அரிசி மாவு - 1 கப்
-
தண்ணீர் - தேவைக்கு
- உப்பு - கால் டீஸ்பூன்
- தேங்காய்த்துருவல் - 1 கப்
- வெல்லம் - 1 கப்
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய்த்துருவலை சேர்த்து வதக்கி, அதனுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
- அரிசிமாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு நீர் விட்டு பிசையவும்.
- மாவை சப்பாத்திக்கு போன்று சிறிதான உருட்டி, அதன் நடுவில் தேங்காய் துருவல் கலவையை வைத்து மூடி விரும்பிய வடிவத்தில் செய்யலாம்.
-
பின் இட்லி பானையில் அடித்தட்டின் மீது வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான கொழுக்கட்டை தயார்.
எள்ளு உருண்டை
தேவையான பொருட்கள்
-
எள் - கால் கிலோ
-
வெல்லம் - கால் கிலோ
- நல்லெண்ணெய் அல்லது வெல்லம் - 2 டீஸ்பூன்
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் எள்ளை வறுத்து ஆறவிட வேண்டும்.
- பின் மிக்ஸியில் எள் மற்றும் வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி, நெய் அல்லது நல்லெண்ணெய் தொட்டு உருண்டையாக பிடித்து எடுத்தால் சுவையான எள்ளு உருண்டை தயார்.
அவல் பாயசம்
தேவையான பொருட்கள்
-
பால்- 2 டம்ளர்
- சிவப்பு அவல் - கால் கப்
-
நாட்டு சர்க்கரை - தேவைக்கு
- ஏலக்காய்த்தூள்- சிட்டிகை
செய்முறை
-
சிவப்பு அவளை தண்ணீர் சேர்த்து கழுவி எடுக்க வேண்டும்.
- பின் சில மணிநேரம் சூடான நீரில் ஊறவிட வேண்டும்.
- அடுத்ததாக பாலை காய்ச்சி அவலை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இறுதியாக நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US