வலது பக்கமாக தும்பிக்கை கொண்ட விநாயகரை வீட்டில் வைக்க கூடாது! ஏன் தெரியுமா?
வீட்டின் நுழைவாயிலுக்கு எதிராக விநாயகர் சிலைகளை வைப்பது பல நன்மைகளை கொண்டு வரும்.
இந்த திருஷ்டி விநாயகர் வீட்டில் நுழையும் தீய சக்திகளை தடுத்து வளத்தைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.
விநாயகரை இப்படி வைத்தால் அவர் உங்கள் வீட்டை பாதுகாப்பார்.
விநாயகரை வீட்டில் நுழைவு வாயிலில் வைத்தால் ஜோடியாக தான் வைக்க வேண்டும். அதில் ஒன்று நுழைவாயிலை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். மற்றொன்று அதற்கு எதிர்புறமாக பார்த்திருக்க வேண்டும்.
ஏனென்றால் ஏதேனும் அறையில் விநாயகர் பின்புறத்தை பார்த்தபடி வைத்தால், வறுமை வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. அதனால் அதனை ஈடு செய்யும் விதமாக மற்றொரு சிலையை எதிர் திசையில் வைக்க வேண்டும்.
வலதுபக்க தும்பிக்கை உள்ள விநாயகரை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும் .
ஏனெனில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகர் என்றால் பூஜையின் போது விசேஷ கவனமும் பராமரிப்பும் செலுத்த வேண்டும்.
இவைகளை வீட்டில் செய்வது கடினம்.
அதனால் தான் இந்த சிலைகளை கோவில்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. அதனால் வீட்டில் வைக்க வேண்டும் என்றால் இடது பக்கமாக அல்லது நேராக உள்ள தும்பிக்கையை கொண்ட விநாயகரை வையுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |