சங்கடத்தை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி 2023 : கொண்டாடுவது எப்படி?
விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் விநாயகப் பெருமானின் பிறந்த நாளாக இது கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு நாட்களில் வரும் அந்தவகையில் இவ்வருடம் விநாயகர் சதுர்த்தி எந்த நாளில் வருகின்றது என்றும் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்றும் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
2023-ல் விநாயகர் சதுர்த்தி எப்போது?
சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் பாத்ரபத மாதத்தின் சுக்ல பக்ஷத்தின்போது பிறந்தார். இது பொதுவாக ஆகஸ்ட்-செப்டம்பர் மாத்தில் வரும். அந்தவகையில் இவ்வருடம் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி வருகின்றது.
விநாயகர் சதுர்த்தி எப்படி கொண்டாட வேண்டும்?
வீட்டில் சிறிய மண் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை கடலில் கரைத்து வழிப்பட வேண்டும்.
பூஜைக்கான விதி
- அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
-
ஒரு சௌகியை எடுத்து, சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் மூடி, சிலையை வைக்கவும்.
- புன்னிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை தெளித்து, தீபம் ஏற்றி, நெற்றியில் குங்குமத் திலகம் இட்டு, லட்டு 5 வகையான உலர் பழங்கள், 5 வகையான பழங்கள் வைத்து அலங்கரிக்கவும்.
-
சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை வெவ்வேறு அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கவும்.
-
விநாயகப் பெருமானை வீட்டில் கொண்டு வர முடியாதவர்கள், கோவில்களுக்குச் சென்று, கணபதிக்கு லட்டு படைத்து வழிப்படலாம்.
விநாயக சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது?
தடைகளை நீக்கி, ஞானம் மற்றும் செழுமையின் கடவுளாக வணங்கப்படும் யானைத் தலைக் கடவுளான விநாயகப் பெருமானின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
பூஜை மந்திரம்
ஓம் கன் கணபதயே நம
ஓம் ஸ்ரீ கணேசாய நம
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய ஹம் பட்
நைவேத்தியங்கள்
மோதகம், கொழுக்கட்டை, பால், தயிர், தேன், அவல்,பொறி, கடலை, சர்க்கரை, பேரீட்சை, தேங்காய்,விளாம்பழம், வாழைபழம், கொய்யா, மாதுளை, லட்டு மற்றும் சுண்டல் இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |