தாறுமாறாக ஓடிய கார்..அமெரிக்க பிரபலம் பரிதாப மரணம்
அமெரிக்காவில் பிரபல வீடியோ கேம் இணைத் தயாரிப்பாளர் வின்ஸ் சாம்பெல்லா கார் விபத்தில் பலியானார்.
வின்ஸ் சாம்பெல்லா
Call of Duty என்ற அமெரிக்க வீடியோ கேம் அதிகம் விற்பனையான ஒன்றாகும். 
இதனை உருவாக்கியவர்களில் ஒருவர் 55 வயதான வின்ஸ் சாம்பெல்லா (Vince Zampella).
இவர் 2010யில் Respawn Entertainment என்ற EAயின் துணை நிறுவனத்தை கொண்டு வந்தார்.
மேலும், Call of Duty தொடரை உருவாக்கிய Infinity Ward என்ற வீடியோ கேம் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தார்.
மனதளவில் ஒரு கேமர்
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் தனது கார் தாறுமாறாக ஓடி ஒரு கான்கிரீட் தடையில் மோதிய விபத்தில் வின்ஸ் சாம்பெல்லா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
"வின்ஸ் ஒரு அசாதாரணமான மனிதர். அவர் மனதளவில் ஒரு கேமர், ஆனால் அதே சமயம் திறமைகளை அடையாளம் கண்டு, மக்களுக்கு சுதந்திரத்தையும், நம்பிக்கையையும் அளித்து, உண்மையிலேயே சிறந்த ஒன்றை உருவாக்கத் தூண்டும் அரிய திறமை கொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நிர்வாகியும் கூட" என்று தி கேம் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் இணை நிறுவனருமான ஜெஃப் கீக்லி சமூக ஊடகங்களில் எழுதினார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |