6 மாத கர்ப்பத்தில் ஓட்டப்பந்தயத்தில் ஓடியவர்.., ரூ.500 கோடி லாபம் கொடுக்கும் பிராண்டை உருவாக்கியது எப்படி?
காஸ்மெட்டிக் பிராண்டை உருவாக்கிய பெண் ஒருவர் தொழில்முனைவோருக்கு தற்போது முன்மாதிரியாக இருக்கிறார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான குஜராத், ஆனந்த் மாவட்டத்தில் பிறந்தவர் வினிதா சிங். இவர், ஆர்.கே.புரத்தில் இருந்த டெல்லி பப்ளிக் ஸ்கூல் தனது கல்வியை படித்தார்.
இதன்பின், 2015 -ம் ஆண்டில் ஐடி மெட்ராஸில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பிறகு, 2017-ஆண்டில் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
தற்போது, இவர் தொடங்கிய சுகர் காஸ்மெட்டிக்ஸ் (Sugar Cosmetics) நிறுவனம், நேரடி நுகர்வோர் பிராண்டாக இருப்பதால் இளம்பெண்கள் மத்தியில் வேகமாக பிரபலம் அடைந்துள்ளது.
இந்நிறுவனத்தில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவர்களின் தயாரிப்பானது பிரத்தேயகமாக உருவாக்கப்பட்ட Sugar செயலி, Instagram, Youtube ஆகியவற்றின் மூலம் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.
முதலில் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்புகள், தற்போது நாடு முழுவதும் விரிந்து 130 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
நிறுவனம் ஆரம்பித்த 8 ஆண்டுகளிலேயே ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
இதில், வினிதா சிங்கின் கணவர் கௌசிக் முகர்ஜி தன்னுடைய மனைவியின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார். இவர், தொழிலை தவிர பல்வேறு விடயங்களிலும் ஆர்வமாக உள்ளார்.
வினிதா சிங் தன்னுடைய 6 மாத கர்ப்ப காலத்தில் மும்பை மராத்தான் (நீண்ட தூர ஓட்டப்பந்தயம்) போட்டி உட்பட 20 மராத்தான் மற்றும் அல்ட்ராமாரத்தான்களில் ஒரு உடற்பயிற்சி ஆர்வலராக பங்கேற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |