என் பெயரை பயன்படுத்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்: பிரிஜ் பூஷன் சிங்
என் பெயரை பயன்படுத்தி வினேஷ் போகத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று பிரிஜ் பூஷன் சிங் கூறியுள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார்.
இந்நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
பிரிஜ் பூஷன் சிங் பேசியது
இதுகுறித்து உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் எம்பியும், முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் பேசுகையில், "என் பெயரை பயன்படுத்தி வினேஷ் போகத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் நான் பெரிய மனிதன் என்று அர்த்தம்.
அவர் எங்கு சென்றாலும் அவரை அழிவு பின்தொடரும். அவர் தானாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது. மல்யுத்த வீரர்கள் ஹரியாணாவிற்கு கதாநாயகர்கள் அல்ல, வில்லன்கள்.
காங்கிரசின் நிலை மோசமடைந்து வருகிறது. ராகுல் காந்தியின் முயற்சிகள் தோல்விடையடைந்து வருகின்றது. நாட்டின் மக்கள் நிராகரிக்க ஆரம்பித்து விட்டார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |