குடிபோதையில் மனைவியை பாத்திரத்தை வைத்து தாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! பரபரப்பு புகார்
மதுபோதையில் தன்னை தாக்கினார் என மனைவி கொடுத்த புகாரில் பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வினோத் காம்ப்ளி
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. பள்ளி பருவத்தில் தெண்டுல்கருடன் இணைந்து இவர் உலக சாதனை புரிந்தார். 51 வயதான வினோத் காம்ப்ளி மும்பை புறநகரான பாந்த்ரா மேற்கில் மனைவி ஆண்ட்ரியாவுடன் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். அவர் நேற்று பிற்பகல் 1 மணிக்கு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். வீட்டிற்குள் நுழையும் போதே தன் மனைவியைக் கண்டபடி திட்டிக்கொண்டே வந்தார். வினோத் காம்ப்ளியை அவரின் 12 வயது மகன் சமாதானப்படுத்த முயன்றான்.
PTI file
வழக்குப்பதிவு
ஆனால் திட்டிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்த வினோத் காம்ப்ளி அங்கிருந்த ஒரு பாத்திரத்தை எடுத்து தன் மனைவியின் தலைமீது வீசி காயப்படுத்தியிருக்கிறார். இது குறித்து வினோத் காம்ப்ளி மனைவி ஆண்டிரா கூறுகையில், காரணமே இல்லாமல் என்னையும், எனது மகனையும் திட்டினார். அதோடு சமையல் பாத்திரத்தால் என்னைத் தாக்கினார்.
மேலும் பேட்டை எடுத்து அடிக்க வந்தார். ஆனால் அதற்குள் வெளியில் ஓடிவந்துவிட்டேன். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு பொலிசில் புகார் செய்தேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து வினோத் காம்ப்ளி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், ஆபத்தான ஆயுதம் மூலம் காயங்களை ஏற்படுத்தியதற்காகவும், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே நடந்து கொண்டதாகவும் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருந்த போதிலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.