நிற்கவே தடுமாறும் முன்னாள் வீரர்..இதயம் நொறுங்கிய சச்சின் டெண்டுல்கர் ரசிகர்கள்..வைரல் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி நிற்கவே சிரமப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வினோத் காம்ப்ளி
சச்சின் டெண்டுல்கரின் நண்பரும், முன்னாள் வீரருமான வினோத் காம்ப்ளி இந்திய கிரிக்கெட் அணியில் 1991ஆம் ஆண்டில் அறிமுகமானார்.
104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதம், 14 அரைசதங்களுடன் 2,477 ஓட்டங்கள் எடுத்தார்.
A Player of a Richest Cricket board in the world #VinodKambli pic.twitter.com/TaVGAC8HZj
— ٰImran Siddique (@imransiddique89) August 6, 2024
அதே போல் 17 டெஸ்ட் போட்டிகளில் 1,084 ஓட்டங்கள் எடுத்த காம்ப்ளி 129 முதல்தர போட்டிகளில் 9,965 ஓட்டங்கள் குவித்த பெருமைக்குரியவர்.
வைரல் வீடியோ
தற்போது 52 வயதாகும் வினோத் காம்ப்ளி (Vinod Kambli) தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
அதில் பைக் ஒன்றுடன் காம்ப்ளி நிற்க முடியாமல் தடுமாறுகிறார். அவருக்கு சிலர் உதவுகின்றனர்.
இந்த வீடியோ கிரிக்கெட், சச்சின் ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. பலரும் தங்கள் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |