பிரித்தானியாவில் விதிகளை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமா? உண்மையை உடைத்த முன்னாள் அட்டர்னி ஜெனரல்
பிரித்தானியாவில் அமுலுக்கு வந்துள்ள புதிய விதிகளை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறித்து முன்னாள் அட்டார்னி ஜெனரல் விளக்கமளித்துள்ளார்.
பிரித்தானியா அதிக ஆபத்துள்ள 33 நாடுகள் அடங்கிய சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, அதிக ஆபத்துள்ள நாட்டிலிருந்து வந்தது குறித்த தகவலை மறைக்க முயற்சிக்கும் பயணிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பிரத்தானியா அரசாங்கம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்காக நாட்டில் எந்த நீதிபதியும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க மாட்டார் என முன்னாள் அட்டா்னி ஜெனரல் Dominic Grieve தெரிவித்துள்ளார்.
இது தவறானது. 10 ஆண்டுகள் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, இது எப்படி வெளியிடப்பட்டது என்பதை கண்டறிய நான் முயற்சித்து வருகிறேன்.
இது ஒரு ஒழுங்குமுறைக் குற்றம், எந்தவொரு ஒழுங்குமுறைக் குற்றத்திற்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படாது என்று நான் நினைக்கிறேன்.
உண்மை என்னவென்றால், அத்தகைய தண்டனை யாருக்கும் கிடைக்காது, நீதிமன்றங்கள் அதை விதிக்கப் போவதில்லை.
நடக்கப்போவதில்லை என்ற ஒன்றை பரிந்துரைத்திருப்பது அரசாங்கத்தின் தவறு என முன்னாள் அட்டா்னி ஜெனரல் Dominic Grieve தெரிவித்துள்ளார்.