புதிய பிரதமர் தேர்வுக்கு எதிர்ப்பு... கொந்தளிக்கும் பிரான்ஸ்
பிரான்சில் புதிதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பிரான்சில் மட்டுமின்றி, அதன் கடல் கடந்த பிரதேசங்களிலும் புதிய பிரதமர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதிய பிரதமர் தேர்வுக்கு எதிர்ப்பு
பிரான்சில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தேர்தல் அறிவித்த நிலையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
முன்னிலை வகிக்கும் இடது சாரியினர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படவே, ஜனாதிபதி மேக்ரான், மிஷல் பார்னியேர் (Michel Barnier) என்பவரை பிரதமரான தேர்வு செய்துள்ளார்.
அதிக இருக்கைகளைக் கைப்பற்றிய இடதுசாரியினரைவிட குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பார்னியேர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து இடதுசாரியினர் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
கடல் கடந்த பிரதேசங்களிலும் புதிய பிரதமர் தேர்வுக்கு எதிர்ப்பு
இந்நிலையில், பிரான்சின் கடல் கடந்த பிரதேசங்களில் ஒன்றான நியூ கலடோனியாவிலும் போராட்டங்களில் ஈடுபட்டார்கள் மக்கள்.
போராட்டங்களின்போது, பொலிசாருடனான மோதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட, அங்கும் வன்முறை வெடித்துள்ளது.
ஏற்கனவே, பிரான்சின் கடல் கடந்த பிரதேசங்களில் ஒன்றான Martinique என்னும் தீவு மக்கள், அதிகரித்துவரும் உணவுப்பொருட்கள் விலையை எதிர்த்து போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.
போராட்டங்களின்போது ஆறு பொலிஸ் அதிகாரிகள் காயமடைய, தீவின் பல இடங்களில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |