பிரான்ஸ் அரசு செய்தித்தொடர்பாளர் மீது வன்முறைத் தாக்குதல்: நிலவும் பதற்றம்
பிரான்சில் இரண்டாவது சுற்று தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வேட்பாளர்கள் பலர் இனரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகிவருகிறார்கள்.
செய்தித்தொடர்பாளர் மீது வன்முறைத் தாக்குதல்
பிரான்சில் வலதுசாரியினரின் வெற்றி கிட்டத்தட்ட நிச்சயம் என்னும் ஒரு நிலைமை காணப்படுகிறது. மற்றொருபக்கம், அவர்களுடைய வெற்றியைத் தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வேட்பாளர்கள் பலர் இனரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகிவரும் நிலையில், மேக்ரான் கட்சியைச் சேர்ந்தவரும், பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளருமான Prisca Thevenot என்னும் பெண் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
Prisca மீதான தாக்குதலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
தானும் தனது உதவியாளர் ஒருவரும் கட்சி ஆர்வலர் ஒருவருமாக போஸ்டர்களை வைத்துக்கொண்டிருக்கும்போது, சிலர் திடீரென தங்களிடம் சண்டைக்கு வந்ததாகவும், விமர்சனங்கள் பின்னர் உடல் ரீதியான தாக்குதலாக மாறியதாகவும் தெரிவித்துள்ள Prisca, தான் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாக்கப்பட்ட அவரது உதவியாளரும், கட்சி ஆர்வலரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், சிறுவர்கள் உட்பட நான்கு பேரைக் கைது செய்து காவலில் அடைத்துள்ளனர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |