மோசமான நபருடன் தொடர்பு... ட்ரம்ப் இன்று ராஜினாமா செய்கிறாரா?
மோசமான நபர் ஒருவருடன் தொடர்பிலிருந்ததாக வெளியான தகவல்கள் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது பதவியை இன்று இரவு ராஜினாமா செய்வதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.

மோசமான நபருடன் தொடர்பு...
பிரித்தானிய இளவரசரும் மன்னர் சார்லசின் தம்பியுமான ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்தததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது.
அதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு, அவர் வாழும் வீட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடைய நண்பர்தான்.

இந்நிலையில், எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த ஆவணங்கள் விரைவில் வெளியாக இருப்பதாக இன்னொருபக்கம் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இன்று ராஜினாமா செய்கிறாரா?
ஆக, எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த ஆவணங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இன்று இரவு 9.30 மணியளவில் ட்ரம்ப் தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
Well, what do you think people? Is Trump going to resign tonight and get Vance to issue him a pardon against any allegations of kiddie fiddling business that might be in those Epstein files? pic.twitter.com/X1xscAVN39
— Kerry Burgess (@KerryBurgess) November 14, 2025
ட்ரம்ப் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவருக்கு பதிலாக தற்போதைய துணை ஜனாதிபதியான JD வேன்ஸ் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க இருப்பதாகவும், வேன்ஸ் பதவியேற்றதும், உடனடியாக ட்ரம்புக்கு பொதுமன்னிப்பு வழங்க இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அவை வெறும் வதந்திகளா அல்லது உண்மையான செய்திகளா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வெள்ளை மாளிகை வட்டாரத்திலிருந்து ட்ரம்ப் ராஜினாமா தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |