தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்க

Virus
By Kishanthini Mar 07, 2023 08:00 AM GMT
Report

 தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரு புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றிக் காரணமாக நிறைய பேர் தற்போது காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, உடல் வலி, தொண்டை வலி போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் மருத்துவமனைகளில் வழக்கத்தை விட அதிகளவில் காய்ச்சல் வழக்குகள் பதிவாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்க | Viral Fever Increasing In Tamil Nadu

H1N1 வைரஸ்

பரவும் இந்த காய்ச்சலானது இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸின் துணை வகையான H3N2 வைரஸ் என்று ஐசிஎம்ஆர் ஆகும்.

இந்த H3N2 இன்ப்ளூயன்ஸா 'ஹாங் காங் ப்ளூ' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சுருக்கமாக புரியும் படி கூற வேண்டுமானால், பன்றி காய்ச்சலுக்கு காரணமான H1N1 வைரஸின் மாறுபாடான H3N2 வைரஸ் தான். 

இந்த H3N2 வைரஸ் தொற்றானது வயதானவர்கள், குழந்தைகள், நோயெதிர்ப்பு சக்தியைக் குறைவாக கொண்டவர்கள் மற்றும் இணை நோய்களைக் கொண்டவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது. 

அந்தவகையில் H3N2 வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன, இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் ? இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்பன பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம். 

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்க | Viral Fever Increasing In Tamil Nadu

 அறிகுறிகள்

  •  அதிகப்படியான காய்ச்சல் (101 டிகிரிக்கு மேல் இருப்பது)
  •  தொண்டை வலி 
  • வறட்டு இருமல்
  • வாந்தி/குமட்டல் 
  • உடல் சோர்வு 
  • உடல் வலி
  • தலைவலி
  • மூச்சுத் திணறல் 
  • மூச்சு விடுவதில் சிரமம் 
  • எதையும் சாப்பிட முடியாமல் இருப்பது 
  • நெஞ்சு வலி
  • வலிப்பு

இதனை தடுக்க என்ன செய்யலாம்?

  • கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வெளியே செல்லும் போது ஃபேஸ் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.
  • தேவையில்லாமல் வாய் மற்றும் மூக்கு பகுதியைத் தொடக்கூடாது.
  • இருமல் மற்றும் தும்மலின் போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை மூடிக் கொள்ளவும்.
  • நிறைய நீரைக் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும்.
  • காய்ச்சல், இருமல் மற்றும் உடல் வலி இருந்தால், பாராசிட்டமாலை எடுக்கலாம். 
  • கைக்குலுக்கலைத் தவிர்க்க வேண்டும்.
  • பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள்.
  • சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்.
  • முக்கியமாக ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுக்கக்கூடாது.

தொற்றில் இருந்து மீள்வது எப்படி?

  • காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால் மருந்துகளை எடுக்க வேண்டும்.
  • காய்ச்சல் அதிகமாக இருந்தால், வலிப்பு வராமல் இருக்க, குளிர்ந்த நீரில் நனைத்த துணியைக் கொண்டு ஒத்தி எடுக்க வேண்டும். 
  • நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும். 
  • முக்கியமாக நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
  • இந்த H3N2 வைரஸ் தொற்று கடுமையாக இருந்தால் வைரஸ் கொல்லி மருந்துகளை மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதுவே இந்த தொற்றில் இருந்து விடுவிக்கும்.
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US