திரைபடத்தில் நடிக்க வைரல் பெண் மோனாலிசா வாங்கும் சம்பளம்.., முதல் படத்திற்கே இவ்வளவா?
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, மோனலிசாவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக வீடியோவை வெளியிட்டார்.
தி டைரி ஆஃப் மணிப்பூர் என்ற படத்தில் அந்த பெண் நடிக்க இருக்கிறார். இதில் அவரது கதாபாத்திரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகளின் பாத்திரமாகும்.
சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
மோனாலிசா இந்த படத்தில் நடிக்க இவருக்கு 21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
படத்திற்காக சம்பளம் வாங்கியது மட்டுமல்லாமல், சில விளம்பர படங்களிலும் அவர் நடித்து வருகிறாராம். இதற்காக அவர் சுமார் ரூ.15 லட்சத்தை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |