கேரளாவில் நகைக்கடையை திறந்து வைத்த மோனாலிசா.., விலை உயர்ந்த நெக்லஸ் பரிசளிப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் நிகழச்சியில், ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, மோனலிசாவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக வீடியோவை வெளியிட்டார்.
சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இப்படத்தில் மோனாலிசா நடிக்க 21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோனலிசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகைக்கடையை திறந்து வைத்துள்ளார்.
தொழிலதிபர் பாபி செம்மனூர் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையை மோனலிசா திறந்து வைப்பதாக வெளியான தகவலை அடுத்து நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர்.
நகைக்கடை திறப்பு விழாவில் மோனலிசாவிற்கு விலை உயர்ந்த நெக்லஸை அணிவித்து அழகு பார்த்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |